அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவல சாலை முன்பு பாரம்பரிய / பரம்பரை மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டி கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் இன்று 24/02/02020 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது .


ஆர்ப்பாட்டத்திற்கு சித்த மருத்துவர் சோலைமலை வரதர்ஸு தலைமை வகித்தார் .


சித்த மருத்துவர் சந்திரசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார் .சித்த மருத்துவர் செல்வகுமார் மற்றும் சித்த மருத்துவர் முகேஷ்  முன்னிலை வகித்தனர்.


பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசுப் பதிவு வழங்க வேண்டும்.


பாரம்பரிய மருத்துவர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்க வேண்டும் .


பாரம்பரிய மருத்துவர்களுக்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும்.


பாரம்பரிய மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் அல்லவென்று அரசு ஆணையிட வேண்டும்.


" alt="" aria-hidden="true" />


" alt="" aria-hidden="true" />


 


இன்னும் சில கோரிக்கையை  வலியுறுத்தி மூலிகை செடிகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


இதில் திருச்சி ,பழனி,ஈரோடு ,சென்னை,வடலூர் ,மதுரை ,செய்யாறு ,தாராபுரம் ,ஆத்தூர்,பல்லடம் ,வேலூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவர்கள் கலந்து கொண்ண்டனர் .