திருச்சி தேசியக் கல்லூரியில் இந்திய கடற்படை சார்பாக பேண்ட் இன்னிசை நிகழ்ச்சி 18.02.2020 அன்று நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இளையராஜாவின் மூத்த மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கலந்து கொண்டார். கல்லூரி செயலர் ரகுநாதன், முதல்வர் சுந்தரராமன் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளரும் உடற்கல்வி துறை இயக்குநர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்." alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்களில் ஒன்றான இசை இந்திய கடற்படை வீரர்களின் கைகளில் தவழ்ந்து விளையாடியது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய கடற்படை இசையமைப்பாளர்கள் கேப்டன் அமெரிக்கா படத்தின் இசையில் தொடங்கி கரகாட்டக்காரன் படத்தின் இசையில் தொட்டு உயிரின் உயிரே பாட்டில் தன் இசை மூலம் கரைய வைத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இரவு நேரங்களில் செவிக்கு விருந்தளித்து இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியதோடு கல்லூரி மாணவர்களுக்கிடையே ஊக்கப்படுத்துவதாக நிகழ்ச்சி அமைந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் கடற்படை வீரர்கள் இசையமைப்பாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.